விளையாட்டு

மீண்டும் சொதப்பிய இந்திய அணி… கணக்கு தீர்த்த நியூசிலாந்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை முழுமையாக இழந்தது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 112 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களும், மனிஷ் பாண்டே 46 ரன்களும் சேர்க்க 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் பென்னட் அதிகப்பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 296 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில்- நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதற விட்டனர். அதிரடியாக விளையாடிய கப்தில் 66 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 22 ரன்களிலும், ராஸ் டெய்லர் 12 ரன்களிலும், நீசம் 19 ரன்களிலும் வெளியேற மறுமுனையில் நிக்கோல்ஸ் தனி ஒருவனாக போராடி 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக இருந்த கிராண்ட்ஸ்ஹோம் 28 பந்துகளில் 58 ரன்கள் குவிக்க 48.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது.

ALSO READ  கர்ணன் படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !   

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு படுமோசமாக பந்து வீசியது.

இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செஸ் போட்டி- பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி!

Shanthi

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : காயம் காரணமாக வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

Admin

இவரை தோற்கடிப்பது கடினம்: விராட் கோலி பகிர்ந்த ரகசியம்

Admin