விளையாட்டு

5 பந்தில் 5 சிக்சர்.. தல தோனி அட்டகாசம்..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியின் போது தோனி 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

IPL 2020 தொடர் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.

சென்னை-மும்பை அணிகளிடையேயான போட்டி எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். எனவே இந்த ஆட்டம் அதிகளவு எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வீரர்கள் பயிற்சி பெறும் வீடியோக்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

ALSO READ  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவுடன் இன்று பாகிஸ்தான் மோதுகிறது

அந்த வகையில் சென்னை அணி கேப்டன் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சியின் போது தோனி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

இந்த வீடியோவை ஸ்டார் போர்ட்ஸ் தமிழ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியின் இந்த ஃபார்மை பார்த்து சென்னை ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

ALSO READ  தோனியை இப்படி எல்லாம் பாத்துருக்கமாட்டிங்க. எப்படி இருந்திருக்காரு பாருங்க

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஒரே இன்னிங்சில் 4 பாக். பேட்ஸ்மேன்கள் சதம்

Admin

கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

Admin

ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று – 3 பேர் கட்டாயத் தனிமை

News Editor