விளையாட்டு

MR 360 – அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஏபிடி ஓய்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

Ab De Villiers Retirement Announcement Udpate; Continued To Play His T20  Leagues | 22 गज की पट्टी पर अब नहीं दिखेंगे एबी डिविलियर्स, क्रिकेट के सभी  फॉर्मेट को कहा अलविदा - Dainik Bhaskar

கடந்த 2011-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்குள் வந்த ஏபி டிவில்லியர்ஸ் ஏறக்குறைய 10 சீசன்களாக அந்த அணிக்கு விளையாடியுள்ளார். 5 முறை ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவும் டிவில்லியர்ஸ் காரணமாக அமைந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஓய்வு குறித்து டிவில்லியர்ஸ் வெளியிட்ட அறிவிப்பில்,

ALSO READ  வீரர்களையும் விட்டு வைக்காத கொரோனா; ஐ.பி.எல் தொடரில் பரபரப்பு !

நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியாகவும், மிகுந்த உற்சாகத்துடனும்தான் விளையாடினேன். எனக்கு 37 வயதானாலும் எந்தவிதமான உற்சாகக் குறைவின்றிதான் களத்தில் விளையாடினேன். எனக்கு ஆர்சிபி அணியுடனான ஐபிஎல் பயணம் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும்.

ஆர்சிபி அணியுடனான பயணம் மறக்க முடியாததாக, வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்ளத்தக்க பயணமாக இருந்தது. எனக்கும் குடும்பத்தாருக்கும் ஆர்சிபி எப்போதும் நெருக்கமாக இருக்கும், தொடர்ந்து ஆதரவு தருவோம். நான் எப்போதும் ஆர்சிபிக்காரர்தான் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாடு திரும்பினார் மீரா பாய் சானு; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

naveen santhakumar

ஐ.பி.எல் போட்டியின் வீரர்கள் தேர்வு; ஏலம் தேதியை அறிவித்த நிர்வாகம்..!

News Editor

iPL-ல் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பானிபூரி வியாபாரி

Admin