விளையாட்டு

பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி – தொடரை கைப்பற்றி அசத்தல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூசிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 467 ரன்களும், நியூசிலாந்து அணி 148 ரன்களும் எடுத்தன.

ALSO READ  இன்று 2வது ஒருநாள் போட்டி:ஆஸ்திரேலியாவை வீழ்த்த தயாராகும் இந்திய அணி

319 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 488 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியாக நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மார்ச்சில் தொடங்குகிறது “ஐபிஎல் திருவிழா”

Admin

“எதிர்பார்ப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான வாழ்க்கை”- 10 திருமண நாள் குறித்து சானியா மிர்சா…

naveen santhakumar

இன்று 2வது ஒருநாள் போட்டி:ஆஸ்திரேலியாவை வீழ்த்த தயாராகும் இந்திய அணி

Admin