விளையாட்டு

விரைவில் தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்சை மீண்டும் அணிக்கு கொண்டுவர முயற்சி செய்வேன் என்று புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

அதிரடி வீரரும், ரசிகர்களால் 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும் அந்த அணியின் ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்றோரும் ஓய்வு பெற்றதால் தென்ஆப்பிரிக்கா அணி சர்வதேச போட்டிகளில் திணறி வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சிறந்த தென்னாப்பிரிக்க அணியை உருவாக்கும் வேளையில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஈடுபட்டுள்ளது. இந்த கிரிக்கெட் போர்டின் தலைவராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் அந்த அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ  மே.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: புவனேஸ்வர் குமார் விலகல்

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மார்க் பவுச்சர் கூறும்போது, 2020 இல் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு சிறந்த அணியை உருவாக்குவதே தங்களது இலக்கு என்றும், தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ் இணைந்து விளையாட அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அணிக்கு திரும்புவதாக விருப்பம் தெரிவித்த டிவில்லியர்ஸின் கோரிக்கையை தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் நிராகரித்தது.மீண்டும் தென்ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் இணைவது குறித்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் சொதப்பிய இந்திய அணி… கணக்கு தீர்த்த நியூசிலாந்து

Admin

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் கொரோனா நிவாரணத்திற்கு பெரிய அளவில் நன்கொடை…….

naveen santhakumar

ஐபிஎல் ஏலம் : கோடிகளில் எடுக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்

Admin