விளையாட்டு

தகுதியற்ற அணி….கடுமையாக சாடினார் கௌதம் கம்பீர்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு வருவதற்கே தகுதியற்ற அணியாக உள்ளது என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர்.

IPL தொடரின் 13 வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்றில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இறுதிப் போட்டிக்கு முன்பாக இரண்டாவது எலிமினேட்டர் போட்டி மட்டுமே மீதம் உள்ள நிலையில் முதல் எலிமினேட்டர் போட்டியில் மோதிக்கொண்ட பெங்களூரு மற்றும் ஹைதரபாத் இரு அணிகளில், ஹைதராபாத் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது எலிமினேட்டர் போட்டிக்கு முன்னேறியது.பெங்களூரு அணி லீக் சுற்றின் முதல் 10 போட்டிகளில் 7 போட்டியை வென்றிருந்தது. கடைசி நான்கு போட்டிகளில் நான்கையும் தோல்வியடைந்து. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணியை பின்னுக்குத்தள்ளி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பிறகு அதன் கேப்டன் விராட் கோலி, ‘நல்ல கிரிக்கெட்டை விளையாடியதால் பிளே ஆப் சுற்றுக்கு வந்திருக்கிறோம்.’ என குறிப்பிட்டார். இதற்கு கடும் விமர்சனத்தை முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் முன்வைத்தார்.

ALSO READ  கிடைத்துவிட்டார் அடுத்த யுவராஜ் சிங்…...முன்னாள் இந்திய அணியின் வீரர் புகழாரம்…...யார் அவர்?????

இந்நிலையில் தற்போது பெங்களூரு அணி முதல் எலிமினேட்டர் போட்டியில் இருந்து வெளியேறியதால் மீண்டும் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், ‘நீங்கள் பிளே ஆப் சுற்றில் இடம் பெற்று விட்டதால் நீங்கள் அதற்கு தகுதியானவர் என சொல்லிக் கொள்ளலாமே தவிர; அதற்கு நீங்கள் சற்றும் தகுதியற்றவர்கள்.

லீக் போட்டியில் கடைசி நான்கு போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்து, அதற்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிர்ஷ்டவசமாக சூப்பர் ஓவரை வென்று பிளே ஆப் வந்திருக்கிறீர்கள். அந்த ஒரு போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் நீங்கள் பிளே ஆப் பற்றி எண்ணியிருக்க முடியாது. பெங்களூரு அணிக்கு இது முற்றிலும் மோசமான சீசன் என்றே கூறவேண்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் படுமோசமாக இருந்தது. இதை வைத்து தான் கூறுகிறேன் தகுதியற்றது.’ என கடுமையாக சாடினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி

News Editor

அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமங்களிலிருந்து வருவார்கள் – ராகுல் டிராவிட்.

naveen santhakumar

இந்திய மகளிர் ஹாக்கி அணியை பாராட்டி பிரிட்டன் அணி

News Editor