விளையாட்டு

“இந்தியர்களுடன் விளையாடுவது மிகவும் கடினம்” ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கருத்து!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது. மேலும் பிரிஸ்பென் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  "சிலர் வன்முறை திட்டமிட்டுள்ளதால் ஜக்கா ஜாம் போராட்டம் ரத்து"; பாரதிய கிசான் யூனியனின் தலைவர் அறிவிப்பு!

இந்நிலையில் இதுகுறித்து  ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,”எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தையும் இந்த தொடரில் கற்றுக் கொண்டுள்ளதாகவும் மேலும்  ‘150 கோடி இந்தியர்கள் இருக்கிறார். அதில் மிகச்சிறந்த 11 பேருடன் விளையாடுவது உங்களுக்கு கடினமாக தான் இருக்கும்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற பிறகு இந்திய அணி பின்வாங்கவில்லை. அவர்கள் மீண்டும் எதிர்த்து போராடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இதன்மூலம் யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தை கற்றுக் கொண்டோம்’ என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு நிச்சயதார்த்தம்:

naveen santhakumar

தோனியை இப்படி எல்லாம் பாத்துருக்கமாட்டிங்க. எப்படி இருந்திருக்காரு பாருங்க

News Editor

பாஜகவில் இணைந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை

Admin