விளையாட்டு

இந்தியா – மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் முதல் டி20 போட்டி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் முதல் டி20 போட்டி

ஐதராபாத்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. கிரன் போலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. இந்தப் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் லக்னோ நகரில் நடந்தன.

ALSO READ  எப்படி வௌவால், நாய், பூனைனு எல்லாத்தையும் உண்ணுகிறீர்கள் ..! சீனர்கள் மீது பாய்ந்த அக்தர்.....

தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் துவங்குகிறது.இத்தொடருக்காக இந்திய அணியின் வீரர்களும் மே.இ.தீவுகள் அணியின் வீரர்களும் நேற்று தனித்தனியாக தீவிர வலை பயிற்சி மேற்கொண்டனர்.

மே.இ.தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். அவரை கட்டுப்படுத்துவது கடினம்.

ALSO READ  24 மருந்துக்களின் மீதான ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா...

அவரது விக்கெட்டை வீழ்த்துவதுதான் முக்கியமானது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய அணியை, இந்தியாவில் மட்டுமல்ல.. வேறு எந்த நாட்டிலும் எதிர்கொள்வது கடினம்தான். ஆனால் கோஹ்லியை பார்த்து ஒரேடியாக பயந்து விடாதீர்கள் என்று எங்கள் பவுலர்களிடம் கூறியுள்ளேன்.

இதற்கு முன்னர் இந்திய அணியுடன், இந்தியாவில் ஆடிய ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளோம். அதனால் தைரியமாக ஆடுங்கள் என்று எங்கள் வீரர்கள் அனைவருக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தோனியின் ஆசம் கிளிக் : வைரல் புகைப்படம்

Admin

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin

கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்:

naveen santhakumar