விளையாட்டு

இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மகளிர் கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்து இந்திய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் என்று வர்ணிக்கப்படும் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேசப் போட்டிகளில் 20ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள மேக்கேயின் ஹாரூப் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை எடுத்துள்ளார். இன்று ஐ.சி.சி சர்வதேச மகளிர் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது, அதில் 762 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
ALSO READ  ஆட்டம் டை ஆனால் இதுதான் நிலைமை…ஐசிசி புது முடிவு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக வீரரை ஆட்டத்தில் சேர்க்காதது குறித்து தோனி விளக்கம்:

naveen santhakumar

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இர்பான் பதான் ஓய்வு

Admin

31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்

Admin