இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு கொரோனா காரணமாக துபாயில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த ஐபிஎல் தொடரின் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது.

அதனையடுத்து இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணாங்காளால் கடந்தாண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி, இந்தாண்டு இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி, சென்னையில், இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.