விளையாட்டு

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன தென் ஆப்பிரிக்க வீரர்.! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஐபிஎல் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள் இன்று ஏலம் விடப்படவுள்ளனர். 

இதில் அதிக தொகைக்கு கிறிஸ் மோரிஸ்சை  ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை அந்தச் சாதனை யுவராஜ் சிங்கிடம் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்தபடியாக  கிளென் மேக்ஸ்வெல் ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபியினால் எடுக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை  ரூ. 7 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ளது. ஷிவம் துபேவை 4.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இவரைத்தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேபிட்டல்ஸ் அணி 2.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

ALSO READ  கொரோனா பரவலால் பொது போக்குவரத்து ரத்து !

இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் மற்றும் கேதார் ஜாதாவையும் எந்த அணியும் முதல் கட்ட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இர்பான் பதான் ஓய்வு

Admin

ஒலிம்பிக் தகுதி போட்டி: கோரிக்கை ஏற்கப்படாததால் சுஷில் குமார் விலகல்

Admin

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா ..!

naveen santhakumar