விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இர்பான் பதான் ஓய்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அனைத்து வித சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கடந்த 2003ம் ஆண்டு ஆல்ரவுண்டராக அறிமுகமான இர்பான் பதான் தனது அசத்தலான ஸ்விங்க் பவுலிங்கால் புகழ் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற சாதனையை தனதாக்கினார்.

ALSO READ  Ind Vs SL - இரண்டாவது ஒருநாள் போட்டி; இலங்கை அணி முதலில் பேட்டிங்

2007ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 கோப்பையை வெல்ல முக்கியமானவர்கள் ஒருவர் இர்பான் பதான். அந்த தொடரில் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தினார்.இர்பான் பதான் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளும், 24 டி20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

2012ம் ஆண்டு கடைசியாக 20 ஓவர் உலகக்கோப்பையில் கடைசியாக விளையாடிய இவர் 2017 வரை ஐபிஎல் போட்டிகளிலும் ஆடினார். இந்நிலையில் தற்போது ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார். இவரது சகோதரர் பிரபல கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் ஆவார். இர்பான் பதான் தற்போது தமிழில் நடிகர் விக்ரம் நடிக்கும் “கோப்ரா” படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐபிஎல் ஏலம் இன்று ஆரம்பம்- வீரர்கள் இடையே கடும் போட்டி

Admin

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்….

naveen santhakumar

ஜூன் மாத சிறந்த வீரர் விருதிற்கு டேவன் கான்வே தேர்வு :

Shobika