இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜடேஜா, இஷாந்த சர்மா, ரஹானே ஆகியோர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இதையடுத்து, கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (டிச.3) நடைபெறுகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக மைதானத்தை சோதனைசெய்த போட்டி நடுவர்கள் நண்பகல் 11.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, பகல் 12 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால், இன்றைய ஆட்டத்தின் முதல் செஷன் ரத்துசெய்யப்பட்டு, இன்று மொத்தம் 78 ஓவர்கள் வீச திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஜடஜோ, ரஹானே, இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.