விளையாட்டு

தமிழ்ப் பாடலுக்கு டிக்டாக் செய்த கெவின் பீட்டர்சன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாகவும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட பாடல்களுக்கு டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதேபோல இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன்-ம் சமூக வலைதளங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். 

ALSO READ  டோக்கியோவில் நாளை தொடக்கம் ! பாராலிம்பிக் போட்டிகள்!

தற்போது அவர் 1993ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த‘ஜெண்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கட்டிக்கோ பாடலுக்கு நடனமாடியுள்ளார். 

வீடியோவின் தொடக்கத்தில், அவர் துடிப்பைக் கணக்கிட முயற்சிப்பது போல் செய்கிறார். ஆனால் சில நிமிடங்கள் கழித்து கால்களை அசைக்கத் தொடங்குகிறார்.   

ALSO READ  ஐபிஎல் சரியான அடித்தளமாக அமையும் : கேப்டன் கோலி பேட்டி

இந்த வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான்  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதேபோல கெவின் பீட்டர்சன் டிக் டாக்கில் புட்ட பொம்மா, பிரபுதேவாவின் சல்மார் (Chalmaar)பாடல் உள்ளிட்ட பல பாடல்களுக்கு டிக்டாக் செய்துள்ளார்.

courtesy.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் தலைசிறந்த பீல்டர்கள் இந்த மூன்று பேர் தான் : ரிக்கி பாண்டிங்

Admin

தொடர் தோல்வி..கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டூ பிளிஸ்சிஸ்

Admin

இன்று 2வது டி20 போட்டி… வெற்றி பயணத்தை தொடருமா இந்திய அணி

Admin