விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் மற்றும் நோவக் ஜோகோவிச் விளையாடினர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்போட்டியில் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்று 52 ஆண்டுகளுக்குப்பின் காலண்டர் ஸ்லாம் சாதனைப் படைபடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைத் தவறவிட்டார். மெத்வதேவ் பெற்றுள்ள வெற்றியால் ஜோகோவிச்சின் காலண்டர் ஸ்லாம் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச்சுடன் மோதி அதில் தோல்வி அடைந்தவர்தான் மெத்வதேவ் என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
ALSO READ  இவங்களை பத்தி பேசாதீங்க..ப்ளீஸ்..கடுப்பான விராட் கோலி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா – மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் முதல் டி20 போட்டி

Admin

விராட் கோலி அதிரடி ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Admin

மணீஷ் நர்வால், சிங்கராஜ் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை…!

News Editor