விளையாட்டு

இரண்டாவது முறையும் இப்படியா?… எப்படியிருக்கிறார் கங்குலி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான செளரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஜனவரியில் கங்குலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் பூரண நலமடைந்த கங்குலி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கங்குலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றிரவு சிகிச்சைக்காக அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
ALSO READ  15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்த தோனி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோலி, அனுஷ்கா குழந்தை இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor

தமிழக வீரரை ஆட்டத்தில் சேர்க்காதது குறித்து தோனி விளக்கம்:

naveen santhakumar

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்…. 4-வது இடத்திற்கு கடும் போட்டி

News Editor