விளையாட்டு

டி20 போட்டி தொடர்: இந்தியா- இலங்கை இன்று பலப்பரீட்சை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடக்கிறது.

இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டை வெற்றியுடன் முடித்த இந்திய அணி புது ஆண்டையும் வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு வீரர்கள் தேர்வுக்கு வாய்ப்பாக அமையும் என்பதால் அனைவரும் தங்கள் திறமையை நிரூபிக்க போராடுவார்கள்.

இந்திய அணியில் ரோகித் சர்மாவு, முகமது சமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான், பும்ரா ஆகியோர் நீண்ட மாதங்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் இந்த போட்டியில் விராட் கோலி 1 ரன் எடுத்தால் சர்வதேச டி 20 போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

ALSO READ  மிரட்டியெடுத்த ஆஸ்திரேலியா: படுதோல்வியை சந்தித்த இந்தியா

அசாமில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகத் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருவதால்
இன்றைய போட்டி நடக்கும் மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.செல்போன், பணப்பை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு மற்றும் குடிநீர் உள்ளே வழங்கப்படும் என அசாம் கிரிக்கெட் சங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டி.என்.பி.எல்., போட்டிக்கு தேர்வான தருமபுரி வீரர்

Admin

டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து அசத்தும் இந்திய அணி

Admin

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சியாளராகும் சச்சின்

Admin