விளையாட்டு

ஐ.பி.எல் தொடரின் கடைசி 2 லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறும் -புதிய அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடப்பு ஐபிஎல்-2021 தொடரின் கடைசி இரு லீக் ஆட்டங்களும் ஒரே நேரத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், அக்டோபர் 8 ஆம் தேதி இரு ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தன. இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் இருபோட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பை-சன்ரைசர்ஸ், ஆர்சிபி-தில்லி ஆகிய இரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் எனத் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நடைபெறும் மதிய ஆட்டத்தில் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளும் இரவு ஆட்டத்தில் ஆர்சிபி-தில்லி அணிகள் மோதுவதாக இருந்தன. இதனால் முந்தைய ஆட்டத்தின் முடிவைத் தெரிந்து கொண்டு, ரன்ரேட் அடிப்படையில் ஆட்டத்தின் முடிவை மாற்றியமைக்க இரு அணிகளும் முயற்சிக்கலாம் என்பதால், ஆட்டத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகங்களின் அடிப்படையில் கூறப்படுகிறது. ஐபில் நிர்வாகம் காரணம் என்னவென்று அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
ALSO READ  நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சஞ்சு சாம்சன் நீக்கம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போராடி தோற்ற தென்னாப்பிரிக்கா.. பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து

Admin

கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்:

naveen santhakumar

இளவரசியாக 5 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய தோனி மகள் ஸிவா.

naveen santhakumar