விளையாட்டு

கடைசி பந்தில் அசத்திய ஷாருக்கான் – கோப்பையை வென்றது தமிழகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தமிழ்நாடு அணி சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் கோப்பை கைப்பற்றியது.

image

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக கிரிக்கெட் அணிகள் நடப்பு சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த கர்நாடகா 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது தமிழ்நாடு அணி. ஹரி நிஷாந்த் மற்றும் நாராயண் ஜகதீசன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஹரி நிஷாந்த் அவுட்டானார். தொடர்ந்து வந்த சாய் சுதர்ஷன், 9 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ALSO READ  ஃபுட்பால் விளையாடியது தப்பா... இங்கிலாந்து வீரருக்கு நேர்ந்த கதி

கடைசி பந்தில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட சிக்ஸர் விளாசி கோப்பையை வென்றுக் கொடுத்தார் ஷாருக். இதன் மூலம் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு அணி.

image

இதுவரை 3 முறையும், தொடர்ந்து 2-வது முறையாகவும் சையது முஷ்டாக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணனுக்கு கொரோனா; வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்ட சவுரவ் கங்குலி… 

naveen santhakumar

தமிழ்ப் பாடலுக்கு டிக்டாக் செய்த கெவின் பீட்டர்சன்…

naveen santhakumar

நெத்தியை தாக்கிய பந்து; ரத்த வெள்ளத்தில் விழுந்த வீரர் – அறிமுக போட்டியிலேயே நேர்ந்த சோகம்!

naveen santhakumar