விளையாட்டு

கோலாகலமாக நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது.ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில், முதலில் அனைத்து நாடுகளின் அணிவகுப்பு நடைபெறுவது மரபாகும். போட்டிகளில் பங்கேற்கும் பெரும்பாலான விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் நாடு வாரியாக விளையாட்டரங்கினுள் அணிவகுத்து நுழைவார்கள். ஒவ்வொரு அணியிலும், முதலில் வரும் வீரர் தங்கள் நாட்டின் தேசியக்கொடியை ஏந்தி செல்வார். இது அவர்களுக்கு கிடைக்கும் கவுரவமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக்கொடிகளை ஏந்தி செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பஜ்ரங் புனியா தேசியக்கொடியை ஏந்தி செல்ல உள்ளார்.

ALSO READ  பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் விலகல்

ஒவ்வொரு நாட்டின் அணி சார்பிலும் ஒருவர் மட்டுமே தேசியக் கொடி ஏந்தி செல்வது வழக்கம். ஆனால், இந்தியா இந்த முறை பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேரை தேசியக்கொடியை ஏந்தி செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

India's flag-bearers at last five Olympics game

2016-ல் ரியோ டிஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவின்போது இந்திய அணி சார்பில் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தம் 115 பேர் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒலிம்பிக் தகுதி போட்டி: கோரிக்கை ஏற்கப்படாததால் சுஷில் குமார் விலகல்

Admin

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன தென் ஆப்பிரிக்க வீரர்.! 

News Editor

Tokyo Olympics: ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!!

naveen santhakumar