விளையாட்டு

இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்…ரவி தஹியா அசத்தல்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா, ரஷய் ஒலிம்பிக் கமிட்டியின் ஜாவூர் உகுவேவ் ஆகியோர் மோதினர்.

Tokyo Olympics: Wrestler Ravi Kumar Dahiya bags 2nd silver medal for India  after Mirabai Chanu - Sports News

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் துவக்கம் முதலே ரஷ்ய வீரர் ஜாவூர் உகுவேவ் சிறப்பாகச் செயல்பட்டு 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ரவி தஹியாவும் தொடர்ந்து கடுமையாகப் போராடி வந்தார். இறுதி கட்டத்தில் 2 புள்ளிகளைப் பெற்ற ரவி 7-4 என கடும் போட்டி அளித்தார். இருப்பினும், அதன்பிறகு ரவி புள்ளிகளைப் பெறவில்லை.

ALSO READ  WWE- ல் இருந்து விடைபெற்றார் 90’ஸ் கிட்ஸ்களின் திகில் நாயகன் 'தி அண்டர்டேக்கர்'!..

இறுதியில் ரஷ்ய வீரர் வெற்றிபெற்றுத் தங்க பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் ரவி தஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு இது ஐந்தாவது பதக்கமாகும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில், இதற்குமுன் மீராபாய் சானு, பி.வி.சிந்து, லாவ்லினா, இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்தனர். மீராபாய் சானு வெள்ளி வென்றார். மற்ற அனைவரும் வெண்கல பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தற்போதுவரை இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிலியர்ட்ஸ் தேசிய சாம்பியன் பட்டம் வென்றார் பங்கஜ் அத்வானி

Admin

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்ய தயாராகும் நியூசிலாந்து அணி

Admin

அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமங்களிலிருந்து வருவார்கள் – ராகுல் டிராவிட்.

naveen santhakumar