விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

Image

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி குரூப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் இந்தியாவின் வந்தனா கடாரியா முதல் கோலை அடித்தார். முதலாவது கால்பாதியின் கடைசி நிமிடத்தில் தென்னாப்பிரிக்க அணி ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் கால்பாதியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

ALSO READ  கொரோனா பரவல்; இந்தியாவுக்கு உதவ முன்வந்த சீனா !
Vandana Katariya scored a hat-trick.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கால்பாதியில் ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணியின் வந்தனா மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என இந்தியாவை மீண்டும் முன்னிலை பெற செய்தார்.

முதல் கால்பாதியை போல் இரண்டாவது கால்பாதியிலும் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்னாப்பிரிக்க அணி ஒரு கோல் அடித்து 2-2 என சமன செய்தது.

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்…. 4-வது இடத்திற்கு கடும் போட்டி

மூன்றாவது கால் பாதியிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தனர். இதனால் மூன்றாவது கால்பாதியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமமாக இருந்தனர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது.

ஆனால் கடைசி கால்பாதியில் இந்திய அணி தொடக்கத்தில் ஒரு கோல் அடித்து அசத்தியது. அத்துடன் 4-3 என முன்னிலை பெற்றது. இறுதியில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் போட்டியை வெற்றி பெற்றது. அத்துடன் காலிறுதி வாய்ப்பையும் தக்க வைத்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்கு கொரோனா இல்லை :

naveen santhakumar

தொடர் தோல்வி..கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டூ பிளிஸ்சிஸ்

Admin

உலக தடகள சாம்பியன்ஷிப் -இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார்

naveen santhakumar