விளையாட்டு

டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையை உருவாக்கிய டோனி லூயிஸ் மரணம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிரிக்கெட்டில் இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையை உருவாக்கிய டோனி லூயிஸ் (78) காலமானார். 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரது மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளது.

ஃப்ராங் டக்வொர்த் என்ற கணிதவியல் நிபுணருடன் இணைந்து டோனி லூயிஸ் என்பவர் 1997-ல் உருவாக்கியதுதான் டக்வொர்த் லூயிஸ் முறை பிரபலமாக டி.எல். என்று அழைக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 1999ம் ஆண்டு இதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டு மழை உள்ளிட்ட இயற்கை காரணங்களால் கிரிக்கெட் ஆட்டங்கள் குறிப்பாக ஒருநாள், டி20 போட்டிகள் பாதிக்கப்படும் போது இந்த முறையைப் பயன்படுத்தி புதிதாக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

இதனையடுத்தே ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பார் இந்தக் கணக்கீட்டினை மாற்றி அமைத்தார். 2014-ல் இது டக்வொர்த்-லூயிஸ்- ஸ்ட்ரெர்ன் என்று டி.எல்.எஸ் முறையாக பிரபலமானது.

ALSO READ  தமிழ் சினிமாவில் கலக்கிய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்.. யார், என்ன படங்கள்.?

1992 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா Vs இங்கிலாந்து இடையிலான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 13 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது பிறகு ஆட்டம் மீண்டு தொடங்கும் போது டி.எல் முறைப்படி 1 பந்தில் 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக வெளியேறியது. 

ALSO READ  சச்சின் சாதனையை கடந்த முதல் வீராங்கனை - மித்தாலி ராஜ்..!

இது பாகிஸ்தானுக்கு சவுகரியமாகப் போனது, தென் ஆப்பிரிக்கா வந்திருந்தால் இம்ரான் கான் கோப்பையை வென்றிருக்க முடியாது. இதனால் இங்கிலாந்தை பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தி விட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ரெய்னாவை இதுக்குத்தான் டீம்-ல எடுக்கல” – முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்..

naveen santhakumar

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இர்பான் பதான் ஓய்வு

Admin

2 ஆண்டுகளாக சரியாக களமிறங்கவில்லை- ஆனாலும் முதலிடம் பிடித்த அஸ்வின்

Admin