விளையாட்டு

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இங்கிலாந்து தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Atleast one Indian cricketer tests positive for COVID-19 in England,  quarantined - The Economic Times Video | ET Now

நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது.

இந்நிலையில், 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் 2 பேரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரரின் பெயர் தெரிவிக்கப்படாத நிலையில் அவருக்கு டெல்டா வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது

ALSO READ  ரெய்னா,ஜடேஜாவுக்கு சவால்விட்ட கோலி

ஏற்கனவே இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் உட்பட ஏழு பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்திய வீரருக்கு தற்போது கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா எழுதிய கடிதத்தில், கோவிஷீல்ட் பாதுகாப்பை மட்டுமே வழங்குவதால், நெரிசலான இடங்களை ‘தவிர்க்க’ வேண்டும் என வீரர்களிடம் கூறினார், வைரஸுக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு சக்தியை இன்னும் பெறவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

ALSO READ  முதல் கொரோனா தொற்றை பதிவு செய்தது லட்சத்தீவு !
Jay Shah to represent BCCI at ICC CEC meeting | Cricket News – India TV

மேலும், ஷாவின் கடிதம் குறிப்பாக விம்பிள்டன் மற்றும் யூரோ சாம்பியன்ஷிப்பிற்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது, இந்த போட்டிகள் சமீபத்தில் அங்கு முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இதெல்லாம் ஒரு தோல்வியா…நாளைக்கு பாருங்க…

Admin

தோனி இடம் அவருக்குத் தான் : உண்மையைச் சொன்ன பிரபல வீரர்

Admin

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin