தமிழகம் விளையாட்டு

ஜல்லிக்கட்டில் மீண்டும் டவுசரை கழட்டி ஓடவிட்ட அமைச்சர் செந்தில் தொண்டமானின் வீர மிகு காளை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அனைத்து பகுதிகளிலும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கடந்த பல மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வீரத்தின் அடையாளமாக உள்ள இந்த களத்தில் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி தங்களுடைய வீரத்தை பறைசாற்றி வருகின்றனர்.

தமிழக ஜல்லிக்கட்டு களத்தில் மிக முக்கியமாக இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் ஜல்லிக்கட்டு காளைகள் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு வருடமும் இவருடைய காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்று மாடுபிடி வீரர்களை களத்தில் நின்று மிரட்டுவது வழக்கம்.

தமிழகத்தில் நடந்த பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளைகள் பரிசுகளை வென்று வந்திருக்கிறது

ALSO READ  ஊரடங்கு காலத்தில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு உரிய மருந்து கிடைக்கும்; சுகாதாரத்துறை அறிவிப்பு !

கடந்த வருடம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் வீரமிக்க காளையான பேட்ட காளி மாடுபிடி வீரர் ஒருவரின் டவுசரை கழட்டி ஓடவிட்டது

இந்த வருடமும் புதுக்கோட்டை மாவட்டம் வடமலை புதூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் ஜல்லிக்கட்டு காளை ” அசுரன்” மாடுபிடி வீரர் ஒருவரின் டவுசரை கழட்டி மிரட்டி இருக்கிறது.

பல்வேறு காளைகள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் செந்தில் தொண்டமானின் ஜல்லிக்கட்டு காளை ஆக்ரோஷத்துடன் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்தது.

ALSO READ  ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லும் "ஜல்லிக்கட்டு" :

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் தொண்டைமான் வளர்க்கும் காளைகளுக்கு தான் தனி ஏசி கேரவன் இருக்கிறது .

இந்த காளைகளை பயிற்றுவிப்பதற்காகவே தனி பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டில் அதிக பலத்துடன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கிய உணவுகளும் விளையாட்டு நீச்சல் நடைபயிற்சி கொள்ளும் காளைகளுக்கு அளிக்கப்படுகிறது.

இன்னும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் செந்தில் தொண்டமானின் வீரமிக்க காளைகள் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; பரபரப்பை கிளப்பிய தூத்துக்குடி துறைமுகம் !

News Editor

சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி அதிர்ந்து போன மருத்துவர்கள்

Admin

பிறந்த குழந்தையை கடித்து குதறிய நாய்கள்

Admin