தமிழகம்

பொங்கல் பண்டிகை: ஆளுநர்,முதலமைச்சர் வாழ்த்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், அறுவடையின் சிறப்பை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், தினசரி வாழ்வில் நாம் உயிர் வாழ்வதற்கு உதவி புரிகின்ற சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.

ALSO READ  பேரவை வரலாற்றிலேயே முதல் முறை… கெத்து காட்டும் ஸ்டாலின்!

“இந்த நன்னாள் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய வற்றின் தொடக்கமாக அமைந்து அனைத்து குடும்பங்களுக்கும் மிக்க மகிழ்ச்சியும், செல்வ செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.

இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக மக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தி அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

ALSO READ  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் 'ஜாபி' ரோபோட்!!!தமிழக நிறுவனம் தயாரிப்பு

மேலும் அதிமுக அரசு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நல்ல முறையில் செயல்படுத்தி வருவதாகவும், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பும், ரூபாய் ஆயிரமும் வழங்கி சிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை” – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

naveen santhakumar

கொரோனா பணிக்காக 1.25 கோடி நிதியுதவி வழங்கிய  வி.ஐ.டி பல்கலைக்கழகம் !

News Editor

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்; தமிழக அரசு !

News Editor