தமிழகம்

இஸ்லாமியர்களை வெளியேற்றும் நிலை வந்தால் முதலில் குரல் கொடுப்பேன்-ரஜினிகாந்த்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுதொடர்பாக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை, சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என கூறினார்.

ALSO READ  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உதவி கோரிய சிறுமி; நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அதை தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, அரசியல் கட்சியினர் சுய லாபத்துக்காக தூண்டி விடுகிறார்கள். மாணவர்கள் எதையும் ஆராயாமல் போராட்டம் செய்தால் அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இங்கேயே தங்கிவிட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.

மேலும் நான் வட்டிக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவலுக்கு தவறு, நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன், எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தலர் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செக்கிங் இன்ஸ்பெக்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

Admin

இதுவே இயேசுவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்… ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

naveen santhakumar

1ம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் !

naveen santhakumar