தமிழகம்

சென்னை நந்தனம் சந்திப்பில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-
சென்னை நந்தனம் சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்தில் போக்குவரத்து போலீசார் மாற்றம் செய்துள்ளனர்.

அது குறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணாசாலை மற்றும் நந்தனம் சந்திப்பில் இதுவரையில் சேமியர்ஸ் சாலையில் இருந்து வெங்கட நாராயணா சாலைக்கும், வெங்கட நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கும் எதிர் எதிரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அங்கு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  சுங்கச்சாவடியில் சொகுசுக்கார் தீப்பற்றி எரிந்தது:

அதன்படி, சேமியர்ஸ் சாலையில் (Chamiers Road) இருந்து செல்லும் வாகனங்கள் அண்ணா சாலையில் இடது மற்றும் வலது பக்கமாக செல்லலாம்.

ஆனால் வெங்கட நாராயணா சாலையில் (Venkatanarayana Road) இருந்து சேமியர்ஸ் சாலைக்கு நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

வெங்கட நாராயணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தெற்கு போக் சாலை (South Boag Road) மற்றும் ம.பொ.சிவஞானம் சிலை (Ma.po. Sivagnanam statue) சந்தியைடைந்து, அதன் வழியாக வாகன ஓட்டிகள் தங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு செல்லலாம்.

ALSO READ  சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து!

அதேநேரத்தில் சேமியர்ஸ் சாலையில் இருந்து வெங்கட நாராயணா சாலைக்கும் வாகனங்கள் நேரடியாக செல்லலாம்.

சோதனை முறையில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிகளுக்கு கொரோனா…

naveen santhakumar

சென்னையில் ஆறு கொரோனா ஹாட் ஸ்பாட்ஸ்…

naveen santhakumar

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

Admin