தமிழகம்

சொத்தை கேட்ட மகன்… தர மறுத்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பூர்விக சொத்தை எழுதி தர மறுத்த தந்தையை மகன் அடித்து துன்புறுத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகேயுள்ள ஆர்.கே. அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு அந்தப் பகுதியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பூர்வீக நிலம் சொந்தமாக இருந்துள்ளது.

ராமசாமி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்த பின்னர் மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பூர்விக சொத்தை எழுதி தரும்படி தன்னை மகன் பச்சமுத்து அடித்து துன்புறுத்துவதாக மகள்களிடம் கூறியுள்ளார். ஆனால் மகள்கள் பெரிதும் கண்டு கொள்ளாததால் காவல் நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றின் உதவியை நாடியுள்ளார்.

ALSO READ  செம்பு வளையலில் தங்க முலாம் பூசி மோசடி:

ஆனால் அதில் எவ்வித சமரசமும் ஆகாததால் வேதனை அடைந்த ராமசாமி சொத்து தொடர்பான ஆவணங்களை கையில் வைத்துக்கொண்டு சாலையோரங்களில் பசி பட்டினியோடு சுற்றி வந்துள்ளார்.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு சொந்தக்காரர் இப்படி மகன் மகள்கள் இருந்தும் அனாதையாக ராமசாமி திரிவதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவருக்கு கொரோனா… 

naveen santhakumar

நோயாளிகளை கவனிக்க அரசு மருத்துவமனையில் புதிய வழி !

News Editor

மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்..

Shanthi