தமிழகம்

தனது நற்செயலால் மக்களின் கவனத்தை ஈர்த்த பிச்சைக்காரர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை;

 மதுரையில், பிச்சைக்காரர் ஒருவர், எட்டாவது முறையாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன், திருமணம் முடிந்த சில ஆண்டுகளில், வேலை தேடி மும்பைக்கு சென்றார். 

வேலை கிடைக்காத காரணத்தால், பிச்சை எடுக்க துவங்கினார். சில நாட்கள் கழித்து  தனது சொந்த ஊருக்கு  திரும்பிய அவரை, குடும்பத்தினர் ஒதுக்கினர். 

இதனால், தொடர்ந்து பிச்சை எடுத்தார். செலவு போக மீத பணத்தை, கல்வி நிறுவனங்களுக்கு  தேவையான சேர், டேபிள் போன்ற  அத்தியாவசிய  உபகரணங்கள் சிலவற்றை வாங்க வழங்கியுள்ளார். 

ALSO READ  பட்டாசு ஆலையில் தீ விபத்து…. 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு…..

தற்போது, மதுரையில் தங்கியிருக்கும் இவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஏற்கனவே, ஏழு முறை தலா, 10 ஆயிரம் ரூபாயை, மதுரை மாவட்ட கலெக்டர் திரு வினய்யிடம் வழங்கியுள்ளார். 

மேலும் எட்டாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

ALSO READ  மாணவர்களுக்கு கொரோனா - மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை

பிச்சைக்காரரின் இத்தகைய நற்செயல் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது ..அதுமட்டுமல்லாது  பிச்சைக்காரருக்கு மக்களிடமிருந்து பாராட்டும் கிடைத்துள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் மூலம், வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம்- CMDA…

naveen santhakumar

செப்டம்பர் அல்லது அக்டோபரில் +2 மறுதேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ் …!

naveen santhakumar

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கியது மத்திய அரசு….

naveen santhakumar