தமிழகம்

தமிழக பட்ஜெட் 2020… பெண்களுக்கு இவ்வளவு திட்டங்களா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்காக சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.அப்போது பெண்களின் பாதுகாப்புக்கு நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணிபுரியும் பெண்களின் நலனுக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும் என அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

ALSO READ  மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையின் போது குறிப்பிட்டார்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்காக ரூ.253.14 கோடி நிதியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக ரூ.450 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பெண்களுக்காக ரூ.1662 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை முதல் துவங்குகிறது…. “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம்….

naveen santhakumar

6 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை !

News Editor

கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

News Editor