சுற்றுலா தமிழகம்

தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 6 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.அதேபோல் திருநெல்வேலியில் இருந்து இன்று மாலை 6.15 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

ALSO READ  பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து- முகக்கவசங்களை திருப்பிக் கேட்கும் பள்ளி கல்வித்துறை…

இந்த சிறப்பு ரயில் இருவழித்தடங்களிலும் கோவில்பட்டி,சாத்தூர்,விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல் ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ALSO READ  ருபாய் 2,500 பொங்கல் பரிசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு..!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயல்பை விட அதிக மழை – சென்னையில் 77%; தமிழகத்தில் 54% அதிகம்!

naveen santhakumar

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் :

naveen santhakumar

கடலூர் ரசாயன ஆலையில் தீ விபத்து; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !

News Editor