தமிழகம்

தோசை சுட்டுத் தராதது ஒரு குத்தமா???? என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

மனைவி தோசை சுட்டு தராத காரணத்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்.

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 66 வயதான ரவிச்சந்திரன் கூலித் தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம், வழக்கம்போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் மேலும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.

ALSO READ  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் :

தன்னிடம் பணமில்லை என மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். பணம் தான் தரவில்லை சாப்பிடுவதற்கு தோசையாவது ஊற்றி கொடு என மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது .வீட்டில் இருந்தால் கணவனின் தொல்லையை பொறுக்க முடியாது எனக்கருதிய மனைவி வத்சலா வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.

குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுக்கிறார், சாப்பிட தோசையும் சுட்டுத்தர மறுக்கிறார் என கோபத்தின் உச்சிக்கே போன ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். 

ALSO READ  எஸ்ஆர்எம் காலேஜ் மாணவர்கள் கையில் இருந்தது தீபாவளி துப்பாக்கியா ? நிஜத் துப்பாக்கியா.!

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ரவிச்சந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோசைக்காக உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு வெந்து நொந்து போன இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடலில் மிதந்து வந்த சீன நாட்டு போதை பொருள்; தமிழக இளைஞர்கள் அடுத்த இலக்கு..? 

naveen santhakumar

தமிழகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி:

naveen santhakumar

கல்வி கற்கும் வயதில் இது தேவையா??? எங்கே போகிறது சிறார்களின் நடத்தை????

naveen santhakumar