தமிழகம்

பெண்களே உங்களிடம் காவலன் செயலி இருக்கா…. அப்ப 10% தள்ளுபடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரையில் உணவகம் நடத்தி வரும் இளைஞர் ஒருவர் காவலன் செயலி குறித்து வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் காவலன் SOSசெயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இச்செயலி குறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரையின் பொன்மேனி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றை நடத்தி வரும் ராஜபிரபு என்ற இளைஞர், காவலன் செயலி குறித்து வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ALSO READ  தமிழகம் வந்தடைந்தது கொரோன தடுப்பு மருந்து !

அதன்படி அவரது உணவகத்தில் சாப்பிட வரும் பெண்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் அவர்களுக்கு உணவு கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் இந்த செயலி குறித்து அறியாமல் உணவகத்துக்கு வருகை தரும் பெண்களுக்கு அதுகுறித்து தகவல்களும் கொடுக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

Shanthi

கொரோனா சந்தேகத்தில் ஓட்டுநர் கழுத்தை அறுத்து தற்கொலை !

News Editor

இன்று முதல்… பொங்கல் பரிசு தொகுப்பை பெற இதை மட்டும் செய்யுங்கள்!

naveen santhakumar