சுற்றுலா தமிழகம்

பொங்கல் சிறப்பு பேருந்துகள்- எங்கு ஏறவேண்டும்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14 வரை பொங்கல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 30 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் 6 இடங்களில் சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ  காவல் நிலையத்தின் வாசலில் இப்படியொரு கொடுமையா !

ஆந்திரா மார்க்கமாக செல்லும் சிறப்புப் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விக்கிரவாண்டி பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் எனவும்,

ALSO READ  தொடர் தற்கொலைகள் - +2 மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

ஈசிஆர் வழியாக புதுச்சேரி,கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் ஆரணி ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும் தென் மாவட்டங்களான மதுரை,நெல்லை,கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஜாமீன் -நீதிபதி கோபிநாதன் உத்தரவு!

News Editor

புத்தாண்டை கொண்டாட போக்குவரத்து விதிகளை மீறுவோர் மற்றும் பைக் பந்தயங்கில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை

Admin

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று !

News Editor