தமிழகம்

மொத்த வியாபாரிகளிடம் 1 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குமரி மாவட்டம் கோட்டார் பகுதியில் உள்ள பல்வேறு பலசரக்கு  மொத்த வியாபாரிகளிடம் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பலசரக்கு பொருட்களை கடனாக பெற்று கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த தம்பதியரை கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை  மீட்டு தரக்கோரி 10க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை வியாபாரிகள் நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். 

ALSO READ  சிக்கன் பிரியாணி ரூ.50, மட்டன் பிரியாணி ரூ.100 - பிரியாணி கடையில் தள்ளுமுள்ளு

மனுவில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகே வாத்தியார்விளை பகுதியில் குமார் -ரம்யா குமார் தம்பதியினர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர் , அவர்கள் கடந்த சில மாதங்களாக கோட்டார் பகுதி வியாபாரிகளிடம் சகஜமாக பழக பல்வேறு  மொத்த வியாபாரிகளிடம் பலசரக்கு பொருட்களை வாங்கி வீடுகளுக்கும் கடைகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். 

இந்நிலையில்   சுமார் 1கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக கோட்டார் வியாபாரிகளிடம் வாங்கிய குமார் -ரம்யா குமார் தம்பதியினர் வியாபாரிகளுக்கு பணத்தை கொடுக்காமல்  குடும்பத்தினருடன்  தலைமறைவாகினர். ஆகையால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்- நடிகர் விஜய் கோரிக்கை ஏற்பு..!

naveen santhakumar

கொரேனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சியின் புது APP…..

naveen santhakumar

மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் -பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

News Editor