தமிழகம்

கருப்பு பூஞ்சை மருந்து; தமிழகத்திற்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.

ALSO READ  புதுச்சேரியில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு ! 

தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது.

இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய் தான் என்றாலும் குணப்படுத்த படக்கூடிய நோய் என்கின்றனர் மருத்துவர்கள்.

ALSO READ  உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு..

முன்னதாக, தமிழக மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பாக 5000 குப்பிகள் ஒதுக்க உத்தரவிட்டிருந்த நிலையில்  மத்திய அரசு தற்போது, ஆம்போடெரிசின் – பி மருந்தை தமிழகத்துக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பரோல் முடிந்து சிறை சென்றார் பேரறிவாளன்

Admin

சசிகலாவை காண எங்களையும் அனுமதியுங்கள்; அமமுகவினர் போராட்டம் !

News Editor

மே 3ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டம்…

naveen santhakumar