தமிழகம்

இளையான்குடியில் பண்ணை வீட்டில் ரகசியமாக தங்கியிருந்த 11 வெளிநாட்டவர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 21 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிவகங்கை இளையான்குடியை அடுத்த புதுக்குளத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அனுமதியின்றி மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நபர்கள் ரகசியமாக தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிந்தது.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். 

ALSO READ  கொரோனா எதிரொலி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.....

இந்த விசாரணையில், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மதபோதகர்கள் கடந்த மாதம் டெல்லி வந்துள்ளனர். அங்கிருந்து ரயில் மூலமாக கடந்த பிப்ரவரியில் திண்டுக்கல் வந்து, ஒரு மாதம் தங்கியுள்ளனர். மதப் பிரசாரத்துக்காக அங்கிருந்து ராமநாதபுரம் சென்றுள்ளனர். பின்னர் இளையான்குடி பள்ளிவாசலுக்கு ஜாமாத்தார்கள் மூலம் மார்ச் 21-ம் தேதி வந்து ரகசியமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்த தகவல் போலீஸாருக்குத் கிடைத்தது. இதையடுத்து பண்ணை வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 11 பேரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த ஏஜென்ட்டுகள் 2 பேர் என மொத்தம் 13 பேரையும் அழைத்துச்சென்ற போலீசார் அவர்களை தனிமைப்படுத்தித் தங்க வைத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாட உதவி எண்கள்… 

naveen santhakumar

தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

naveen santhakumar

அறியாமை இருளில் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் – அமைச்சர் மஃபாய்

Admin