தமிழகம்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வி துறைக்கு  பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் கோரிக்கை.


தமிழகத்தில் கொரோனா  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தமிழ்க அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது. தற்போது பொதுத் தேர்விற்கு பதிலாக பொதுவான தேர்வை அந்தந்த பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம் அதாவது மாணவர்கள் விருப்பப்பட்டால் மதிப்பெண்களை கூட்டிக்கொள்ள தேர்வை எழுதலாம் என்ற உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

இதன் மதிப்பெண்களை கூட நிறந்தர மதிப்பெண்களாக கூட எடுத்துக் கொள்ளலாம் , அதே நேரத்தில் பதினோராம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயப்படுத்த கூடாது முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் ஏனென்றால் தனியார் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது , இதனால் ஏழை மாணவர்கள் நிலை கேள்வி குறியாகிவிடும்,  மாணவர்கள் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு களை எடுத்துக் கொள்ளலாம் என  உத்தரவிட வேண்டும்.

ALSO READ  காஞ்சிபுரம் அருகே அரங்கேறிய கொடூரம்:

மேலும் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வி துறையுடன் பதினோராம் வகுப்பு விருப்ப பாட பிரிவை எடுத்தக் கொள்ள அறிவித்திருக்கின்ற நுழைத் தேர்வை ரத்து செய்ய  வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்..!

Admin

சலூன் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் !

News Editor

பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை ! 

News Editor