தமிழகம்

12 வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா; அதிகாரிகள் ஆலோசனை ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ALSO READ  நீட் தேர்வு ரத்து: அமைச்சர் உறுதி..!

அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், மே 3-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை, பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுத்தேர்வை, திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஓரிரு வாரங்கள் தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகம் முழுவதும் பிப் 1 to 20 வரை… அமைச்சர் திடீர் அறிவிப்பு!

naveen santhakumar

‘சார், உன் ATM கார்டு மேல இருக்க நம்பர் சொல்லு சார்’-கும்பலை டெல்லியில் கைது செய்த தமிழக போலீசார்….

naveen santhakumar

உங்க தொல்லை தாங்க முடியல…கதறிய போலீஸ் அதிகாரி

Admin