தமிழகம்

14 முதல் 28 நாட்கள் மிக முக்கியமானது….சுகாதாரத்துறை செயலாளர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாகவே இருந்தது.பிற மாவட்டங்களில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் மேலும் தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில் வரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது என்றும், இந்த காலங்களில் கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் அனுப்பி உள்ள செய்தியில்,”தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம், மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது. 

வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ALSO READ  உஷார்!!!!..இனிமே இந்த பொருட்களை வாங்காதீங்க…...

கட்டுமான பகுதிகளில், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த இரு நாட்களாக தஞ்சாவூரில் ஒரு கட்டுமான பகுதியிலும், சென்னை தண்டையார்பேட்டையில் பீகாரில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ALSO READ  சென்னை மாணவியை காசி ஏமாற்றியது எப்படி????

கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை எந்த சூழ்நிலையிலும் குறைக்க கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பல மாநிலங்கள் ‘ஆன்டிஜென்’ பரிசோதனை மட்டும் செய்வதால், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளாவிடில், பலருக்கும்  கொரோனா பாதிப்பை கண்டறிய முடியாமல் போய்விடும். எனவே இனிவரும் 14 முதல் 28 நாட்களும் மிகவும் முக்கியமானது. பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்று தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்”.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

NEET முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு- தமிழத்திலிருந்து இம்முறை அதிகளவு மாணவர்கள் தேர்வு

Admin

கோயம்புத்தூர் தினம்

Admin

தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை; 5 ஆயிரம் மருந்து குப்பிகள் வாங்க உத்தரவு!

News Editor