தமிழகம்

கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அங்கன்வாடி பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ்  நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ் - Oneindia Tamil

ஏற்கனவே கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டுகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு அரசின் பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை கிடைக்கிறது.

இந்நிலையில், அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலைக்கான கட்டுமான பணி தொடக்கம்

அதன்படி அங்கன்‌வாடிப்‌ பணியாளர்‌, குறு அங்கன்வாடிப்‌ பணியாளர்‌ மற்றும்‌ அங்கன்வாடி உதவியாளர்‌ பணியிடங்களுக்கு தகுதிகள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்‌டுள்ளதுடன்‌ மேலே முதலாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌ ஆணையிட்டுள்ளவாறு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினை பின்பற்ற வேண்டும்‌ என்றும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்‌, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌, இயக்குநர்‌ மற்றும்‌ குழும இயக்குநர்‌ அவர்கள்‌ தனது கடிதத்தில்‌, அங்கன்வாடி ஊழியர்கள்‌ காலிப்பணியிடங்களில்‌, ஆதரவற்ற விதவைகள்‌, விதவைகள்‌ மற்றும்‌ கணவனால்‌ கைவிடப்பட்டோர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கன்வாடிப்‌ பணியாளர்‌, குறு அங்கன்வாடிப்‌ பணியாளர்‌ மற்றும்‌ அங்கன்வாடி உதவியாளர்‌ பணியிடங்களுக்கு தகுதிகள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

naveen santhakumar

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

Admin

மதுபான டோக்கங்களை கலர் ஜெராக்ஸ் எடுத்த மதுப்பிரியர்கள் கைது.. 

naveen santhakumar