தமிழகம்

அங்கீகாரம் ரத்து – இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசின் 7.5 % இடஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வாங்க கூடாது என்றும் மீறினால் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முறைகேட்டில் மேலும் 30 பேருக்கு தொடர்பு- வீடியோ - video  Dailymotion

பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கட்டணம் முழுவதையும் தமிழக அரசு ஏற்பதாக அறிவித்து இருந்தது. ஆனால் ஒரு சில பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம்  வசூலித்தால் அதன் அங்கீகாரம் ரத்து.... கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை ...

இந்த புகாரை அடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் உள்பட எந்த வகை கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா அவர்கள் எச்சரித்துள்ளார்

ALSO READ  சென்னையை தொடர்ந்து மதுரைக்கும் மெட்ரோ ரயில்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

அரசுப் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் ஏதேனும் கட்டணம் இதற்கு முன்னர் வசூலித்து இருந்தால் மாணவர்களிடம் அதை உடனே திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் – மாநில தேர்தல் ஆணையம்

News Editor

அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்த முடிவு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

News Editor

2015 மாதிரி நடந்திட கூடாது – ‘கார் பார்க்கிங்’காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

naveen santhakumar