தமிழகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு – கவர்னரை சந்தித்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்,அக்டோபர் 6 மற்றும், 9ம் தேதிகளில் நடத்தப்பட்டது.

இதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களுக்கான ஓட்டு எண்ணிக்கை, 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர்.

இச்சூழலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கவர்னரை சந்தித்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என அ தி மு க சார்பில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.

ALSO READ  மூக்குத்தி அம்மன் அருளால் வெற்றி பெற்ற பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்-க்கு வாழ்த்துக்கள்...ஆர்.ஜே.பாலாஜியின் குசும்பு….
edappadi palanisamy meet tn governor rn ravi tomorrow

அப்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என புகார் அளித்துள்ளோம் என்றும் தேர்தல் தொடர்பாக புகார்கள் அளித்தும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவித்தோம் என கூறினார்.

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர்களது வெற்றியை தாமதமாக அறிவித்தனர். ஆனால் திமுகவினர் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர்.

ALSO READ  6 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை !
இது என்னங்க நியாயம்..? 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இரண்டு கட்டம்  ஏன்.? காண்டான பாமக.! | What justice is this ..? Why two phases for 9  district rural local elections? PMK angry.!

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடக்கும் என்பதை உறுதிபடுத்தவும் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் என்ப அது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு !

News Editor

குளித்தலை திமுக எம்எல்ஏ-க்கு கொரோனா… 

naveen santhakumar

15 ஆண்டுகளாகியும் ஆறாத சுனாமியின் நினைவுகள்

Admin