தமிழகம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்குமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகி போகிறது.


கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. ‘நீட்’ தேர்வால் மனரீதியாக பாதிப்புக்குள்ளாகும் மாணவ மாணவிகளில் அரியலூர் அனிதா உள்பட சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று மேட்டூரை சேர்ந்த ஏழை மாணவன் தனுஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது.
இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தரும்படி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்த மசோதாவை ஆதரிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

ALSO READ  காஞ்சிபுரம் அருகே அரங்கேறிய கொடூரம்:

இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பேசினார்கள். நீட் தேர்வால் மாணவ மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களையும், தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பட்டியலையும் முன்னுதாரணம் காட்டி இனி நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா நிறைவேறியது. இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்குமா என்பது உறுதியாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

மழை,வெள்ளம் – ரூ.2,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை

naveen santhakumar

அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் :

naveen santhakumar