தமிழகம்

பேருந்து படிக்கட்டில் நின்று மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர்,நடத்துநர் மீது நடவடிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பேருந்தின் பின்னால் உள்ள படிக்கட்டில் ஏறி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்...

பேருந்து படிக்கட்டில் நின்று மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகப் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் கீழே விழுந்து அடிபட்டனர். 2 பேர் சம்பவ இடத்திலேயே பேருந்தின் டயர் ஏறி பலியானார்கள். இதனால் பேருந்து படிக்கட்டில் பயணிப்பவர்களைத் தடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு முறையான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் பெரிய அளவில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் உள்ளிட்ட யாரும் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி பயணிக்க அனுமதியளித்தால் பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மற்றும் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share
ALSO READ  எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகை - 8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் ஆறு கொரோனா ஹாட் ஸ்பாட்ஸ்…

naveen santhakumar

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

naveen santhakumar

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவி…

naveen santhakumar