தமிழகம்

அன்னதானம் முதல் அனாதை பிணம் வரை அடக்கம் செய்யும் அமிர்தம் அறக்கட்டளை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் ஏழை , எளிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரொனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடி வருகிறது. கொரொனா பாதிப்பு ஒருபுறம் என்றால் சாலையோரவாசிகளாக வாழக்கூடிய  ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர்கள் நிலை மிக கடினமான சூழல் ஆகும்.

அதுவும் ஊரடங்கு  காலங்களில் சாலையோரம் வசிப்பவர்கள் நிலை மிகவும் மோசமானதாகும். கிடைக்கக் கூடிய உணவை மனிதனிடம் மனிதனே கையேந்தி ஜீவனம் நடத்தி வருகிறார்கள். வயது மூப்பு காரணமாக சிலர் உடல்நிலை பாதித்து பொது இடங்களிலேயே இறந்து வருகிறார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விபத்துக்கு உள்ளாவதும் உண்டு.  சாலையோரம் வசிப்பவர்களுக்கு  அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் ஆண்டுதோறும் தினமும் பல ஆண்டுகளாக தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றார்கள். 

ALSO READ  குடும்ப அட்டைக்கு ரூபாய் 3000 நிவாரணம் வழங்கப்படும்; புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு   

மேலும் சாலையோரவாசிகள், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனாதையாக பொது இடங்களில் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையங்களில் இருந்து வரும் தகவலின் அடிப்படையில் அனாதை பிரேதங்களை அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதி  தனது சொந்த நிதியிலிருந்து இறுதிசடங்குடன் நல்லடக்கம் செய்து வருகிறார்கள். 

காவல் துறையினர் விசாரணையில் பெயர், விலாசம் தெரியாத அனாதை பிரேதம் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்ட அறிக்கையுடன் சம்மந்தப்பட்ட சரக காவல் உதவி ஆய்வாளர் அல்லது தலைமை காவலர் முன்னிலையில் உடலைப் பெற்று மாலை அணிவித்து பால், தயிர் தெளித்து  மலர் தூவி நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.

ALSO READ  கொரோனா நோயாளிகளின் உணவு தேவைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் அன்னதானம் முதல்  அனாதை பிரேதங்கள் வரை நல்லடக்கம் செய்து வருகின்றனர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

BREAKING பரபரப்பு… தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டிடம்!

naveen santhakumar

சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர் – பரிதாபமாக உயிரிழந்த அரசு மருத்துவர்

News Editor

கொரேனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சியின் புது APP…..

naveen santhakumar