தமிழகம்

திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர வேண்டும்- அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

திங்கட்கிழமை (18/05/2020) முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வளாகத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், மண்டல வளாகத் தலைவர்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் தமிழக அரசின் ஆணையை மேற்கோள் காட்டி மே 18 முதல் அனைத்து அலுவலர்களையும் பணிக்கு வர அறிவுறுத்திள்ளது.

ALSO READ  அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது

சனிக்கிழமை உட்பட வாரத்துக்கு 6 நாட்கள் வேலைநாட்களாக இருக்கும் என்றும், 50% பணியாளர்களைக் கொண்டு அலுவலகங்கள் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மொத்த அலுவலர்களையும் இரு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவினர் திங்கள் செவ்வாய் கிழமைகளிலும், மற்றொரு பிரிவினர் புதன் வியாழக் கிழமைகளிலும் எனச் சுழற்சி முறையில் பணியாற்றுவர் எனத் தெரிவித்துள்ளது.

ALSO READ  ஜன.31 வரை ஊரடங்கு… கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

மேலும் இரு பிரிவாகப் பிரித்துச் சுழற்சி முறையில் அனைத்துப் பணியாளர்களும் பணியாற்றுவதற்கான கால அட்டவணையைத் தயாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு ! 

News Editor

ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

News Editor

இரண்டு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி !

News Editor