தமிழகம்

திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்- TNPSC அறிவிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது.

இதனால், தமிழக அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது. எனவே தலைமைச் செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது எனவும்,
அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் தோ்வுகள் நடைபெற வாய்ப்பில்லை என இரண்டு நாட்களாக செய்திகள் வலம் வந்தன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி:-

ALSO READ  இனி No தில்லுமுல்லு.. தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால் , நடப்பாண்டு டி.என்பிஎஸ்சி தேர்வு ரத்து என்பது தவறான தகவல். நடப்பாண்டுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும்.

எனவே தேர்வு எழுத காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது. ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020 ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. கெத்து காட்டிய மதுரை..

Admin

முகக்கவசம் அணியும் முறை; வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின் !

News Editor

ஆன்லைன் ரம்மி தடை?

Shanthi