தமிழகம்

சென்னையில் 3 நாட்களாக பாரத ஸ்டேட் வங்கியின் ATM மையங்களில் கொள்ளை – குற்றவாளிகள் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சண்டிகர்:

கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ATM மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன.இதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் இழப்பீடு ஏற்படவில்லை. சென்னையில் கடந்த 17-ம் தேதி, 18-ம் தேதி மற்றும் 19-ம் தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன.

SBI ATM transactions: SBI, Bank of Baroda squeeze micro-ATM transactions of  other banks

சாதாரண வங்கி அட்டையை பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுத்த தகவல் வங்கிக்கு தெரியாதபடி நூதன முறையை கையாண்டு இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.தமிழகத்தில் முதல் முறையாக இது போன்ற நூதன திருட்டு நடந்துள்ளது. மேலும் வடமாநில கும்பல் இதில் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ  6 வயது மாற்றுத்திறனாளி மாணவிக்கு சூடு.. பள்ளி மீது புகார்..

இந்த நூதன திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படையினர் அரியானா விரைந்தனர்.இந்நிலையில் ATM கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

State Bank of India Insufficient balance alert! SBI bank average Minimum  Balance charges failed ATM transaction fee | Business News – India TV

ஹரியானா மாநிலம் மேவாக் பகுதியில் தனிப்படை போலீசார் கொள்ளையனை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.இதையடுத்து SBI-ன் ATM கொள்ளை வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.அனைத்து SBI வங்கிகளிலும் பணம் சரியாக உள்ளதா…??? என சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் ..!

naveen santhakumar

திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

naveen santhakumar

இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலை – கனவை நனவாக்கிய லாரன்ஸ்!

naveen santhakumar